சாதுர்யா, பிறந்த முதல் மாதமே மருத்துவமனைக்கும் வீட்டிற்கும் ஆக அவளின் பயணம் ஆரம்பித்தது.
2 மாதத்திற்குள் 10 முறைக்குமேல் மருத்துவமனை பயணம். இதில் பிரியா பெரியம்மா வீட்டிற்கும் இந்த பயணம் நீண்டது.
3ம் மாதம் பழனி, மருதமலை,ஈச்சனாரி, இன்னும் மற்றும் சிறு சிறு கோவில்கள்.
4ம் மதம் பெங்களுரு விற்கு வந்து சேர்ந்தாயிற்று. இங்கு, 10 நாட்கள் இருந்த பின்பு மீண்டும் கோயம்புத்தூர் பயணம். பெரியம்மாவின் வளைகாப்பிற்கு.
5ம் மாதத்தில் மீண்டும் பழனி சென்று திரும்பி. வளைகாப்பு முடித்து. மீண்டும் பெங்களுரு வந்து சேர்ந்தாய்ற்று. இதற்குள் சாதுர்யா சென்ற இடங்கள் அளவற்றது. ஒரு கைக்குழந்தை செல்ல முடியாத இடங்களுக்கெல்லாம் சென்றாயிற்று. பிறப்பு சான்று வாங்க, பெரியம்மா வின் ஸ்கூல்,பல ஹோட்டல்கள் என அடுக்கலாம்.
6ம் மாதம் முதல் நாளே அன்னபிரசன்னம் செய்ய சென்னபட்னம் , கிருஷ்ணர் கோவில் சென்றாள். அங்கு சோறு ஊட்டல் விழா நன்றாக நடந்தது சாதுர்யாவிற்கு. பின் 2 வாரங்கள் கழித்து தாத்தா ஊரிலிருந்து வந்தபோது சிக்பெட் சென்றாள் சாதுர்யா. அந்த நெரிசலான ஜன சந்தடி மிகுந்த இடத்திற்கு 6மாத குழந்தை.... :) அதுவும் தசரா கொண்டாட்ட நேரம். கூட்ட நெரிசலில் ஒரே குதுகலமாய் வேடிக்கை பார்த்து மகிழ்ந்தாள் சாதுர்யா.
பெங்களுரு வந்த பின், BTM A2B , இந்திராநகர் A2B, வில்சன் கார்டன் A2B , கிருஷ்ணா கிரி A2B , தர்மபுரி A2B என எல்லா A2B க்களிலும் கால் பதித்து அம்மா விற்கு ஏற்ற மகளாய் தன்னை நிலைப்படுத்தி ஆயிற்று :)
இனும் சில ஷாப்பிங் மால் பயணம்,கோவில்கள்,ஹோட்டல்கள் என தன்னை ஒரு traveller என நிரூபித்து விட்டாள்.
இப்படித்தான் ஆரம்பித்தது CHAA's travel........ தொடரும் ..............