Friday, 24 April 2020

PARAI... The rhythm mixed in blood....


Music boosts Brain Chemicals by stimulating the formation of certain brain chemicals. Listening to music increases the neurotransmitter dopamine (brains motivation molecule). Scientific and psychological studies depict music can lift our moods, combat depression, improve blood flow, lower levels of stress-related hormones and ease pain. Can improve the outcomes for patients after surgery.

PARAI



Parai means “To speak or to communicate” is one of the oldest percussion instruments dating back to prehistoric times in South Indian state of Tamil Nadu. Symbol of Tamil culture the instrument is used as a communication mechanism to convey messages to people and alert danger – mentioned in Tholkaapiam, Kurunthokai.

The parai is a frame drum of 35cm in diameter with shallow ring of wood (preferred – Neem) and stretched cow hide glues to it. It is played with two sticks – one long thin flat bamboo stick called as Sundu kuchi (approx 28cm) and a short thick called Adi kuchi (approx 18cm). it is tied by a strap over one shoulder and held vertically by pushing it towards the performers body and played entirely by 2 sticks.

The drummer will heat Parai in a bonfire holding it closely to remove moisture and tighten them to produce high pitch loud cracking sound. Played with dance and is called as Parai Aattam in occasions like funerals, childbirth and marriages.
Song of PARAI

Thursday, 23 April 2020

Pepper...


Black pepper (Piper nigrum) King of Spices.

A perennial climbing vine of the family Piperacease, native to Malabar Coast of India.

The black pepper plant is a climber, reaches almost 10meters which requires long rainy season, moderately high temperature. They start bearing in 2 to 5 years and lasts for almost 40years which are also grown in tea or coffee plantations. Starts flowering in the spikes and becomes fruits also called as peppercorns. They mature and bear a single seed with aromatic odor, characteristic flavor due to the presence of piperine.

Green peppercorns first appear by year end which are handpicked and dried in sun for green peppercorn. When the mature unripe berries are boiled, fermented and dried which turns them into black peppercorn. When they are soaked in water, black skin is removed to get white peppercorns. Red peppercorns appear when they fully ripen in the vine for another 2 months.

Apart from the usage as spice around the world, Pepper also has a usage in medicine as a carminative and a stimulant of gastric secretions. Considered as a vital healing spice in Ayurveda with its medicinal value which is packed with potassium, magnesium, iron, vitamin K and vitamin C.

The global pepper market revenue in 2018 is estimated to $4.1billion, Vietnam being the largest pepper production country in the world (36% of global production – 200k tones in 2019) followed by Brazil, Indonesia and India. Market is expected to grow with projected volume to 840k tones by end of 2025.

India known as spice country, were large portion of cultivation happens in Southern part of India and popular is Malabar black pepper from Kerala (40% of India production), Karnataka, Tamilnadu and few other southern states. Tellicherry peppercorns India considered as the finest pepper in the world, also Kampot pepper of Cambodia acknowledged as the best pepper in the world and has earned Geographical Indication (PGI).

Few lines from Hoang Thi Lien – Ececutive Director – International Pepper Community.
As of today, there are no specific vaccines or treatment for Corona virus Diseases and the possible way of dealing is by preventing and slowing down its transmission. Aside from implementing the common social/physical distancing method, we ought to try to live and eat as healthy as possible so that our immunity is strong and can defeat the Corona virus.
Black Pepper is widely acclaimed for its ability to boost the immune system. 

Tuesday, 21 April 2020

புடவை !!!

புடைவை,புடவை அல்லது சேலை $CUT$ (அ) "'சீலை'" (sari) என்பது, தெற்காசியப் பெண்கள் உடுத்தும் மரபுவழி ஆடையாகும். இந்த ஆடை இந்தியாபாகிஸ்தான்இலங்கைவங்காள தேசம் முதலிய நாடுகளின் பெண்களால் விரும்பி அணியப்படுகின்றது. இது பல மொழிகளிலும் பல்வேறு பெயர்களில் அறியப்படுகின்றது.
தமிழில் சேலை அல்லது புடவை என்றும், ஹிந்திகுஜராத்திமராட்டி ஆகிய மொழிகளில் சாடி என்றும், கன்னடத்திலும்தெலுங்கிலும் முறையே சீரேசீரா என்றும் அழைக்கப்படுகின்றது. சேலை கட்டும்போது இடை ஆடைகளாக பாவாடையும், பிளவுஸ்ம் அணியப்படுகிறது.
பொதுவாக இதன் நீளம் 4 - 5 யார் வரை இருக்கும். சில புடவைகள் 9 யார்கள் வரை இருப்பதுண்டு. பல நிறங்களிலும், பலவகையான வடிவுருக்களைத் தாங்கியும் வரும் புடவைகள், செவ்வக வடிவம் கொண்ட தைக்கப்படாத உடையாகும்.மடிப்புகளுடன் உடலை சுற்றியவாறு கிரேக்க பாணியில் உடுதபடுகிறது.[1]பருத்தி நூல், பட்டு நூல், மற்றும் பலவிதமான செயற்கை இழைகளையும் கொண்டு நெய்யப்படுகின்ற புடவைகள், தங்கம்வெள்ளி ஆகிய உலோகங்களின் மெல்லிய இழைகளைப் பயன்படுத்தி அழகூட்டப்படுவதுண்டு.
வரலாறு
https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/59/Raja_Ravi_Varma%2C_Pleasing.jpg/170px-Raja_Ravi_Varma%2C_Pleasing.jpg
ரவி வர்மாவின் ஓவியத்தில் புடவை உடுத்திய திரௌபதி.
உடலைச் சுற்றிக் கட்டுகின்ற தைக்கப்படாத ஆடைகள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பயன்பாட்டில் இருந்ததற்கான ஆதாரங்கள் உண்டு. இந்தியாவில் இவற்றின் தொடக்கம் பற்றி முடிவு செய்யக்கூடிய சான்றுகள் இல்லை. இந்தியாவில் மட்டுமன்றி உலகின் பண்டைக்கால நாகரிகம் நிலவிய பல இடங்களிலும் இத்தகைய ஆடைகள் இருந்திருக்கின்றன. இவ்வகையைச் சேர்ந்த புடவையின் தோற்றம் பற்றியும் இதே நிலைதான். இது பண்டைக் கிரேக்கத்திலிருந்து இந்தியாவுக்கு வந்திருக்கக்கூடும் எனச் சிலர் கருதுகிறார்கள். ஆனால் இது இந்தியாவிலேயே உருவானதென்பது வேறு சிலரின் கருத்து. கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்த இலக்கியங்களிலேயே புடவைகள் பற்றிய குறிப்புக்கள் உள்ளன. மகாபாரதத்தில் வரும் திரௌபதியின் புடவை களையும் நிகழ்வு குறிப்பிடத்தக்கது. கி.மு முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்ததெனக் கருதப்படும், உடலைச் சுற்றி இறுக்கமாக கற்சட்டைபோல் புடவை உடுத்திய களிமண் உருவ பொம்மையொன்று வட இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பிற்காலங்களைச் சேர்ந்த பலவிதமாகப் புடவை கட்டிய பெண்களின் உருவச் சிலைகள் இந்தியா முழுவதும் காணப்படுகின்றன.
கிட்டத்தட்ட கி.பி 3000ம் ஆண்டளவில் சிந்துசமவெளி நாகரிக காலப்பகுதியில் முதன் முதலில் சேலை ஒரு ஆடையாகப் பயன்படுத்தப்பட்டது என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. சேலைகளைப் பட்டு நூலால் தயாரிக்கும் பாரம்பரியம் தென்னிந்தியாவிலேயே தோற்றம் பெற்றது என்று நம்பப்படுகின்றது. இந்தியாவிலே பட்டின் இராசதானிகளாக கர்நாடகா மாநிலத்திலுள்ள பெங்களுரும் மைசூரும் விளங்குகின்றன. பருத்தி கலக்கப்படாத துய்மையான சாறி என்ற பட்டுநூல் சூரத்தில் மட்டுமே கிடைக்கின்றது. இந்தப் பெயரே ஆங்கிலத்தில் சேலைக்கு சாறி என்ற பெயர் வரக் காரணமாயிற்று.சேலையைப் போல உடல் முழுவதையும் சுற்றி அணியும் ஆடை பற்றிய முதல் குறிப்புகளை கிமு 100 அளவில் காணமுடிகிறது. சுங்க ஆட்சிக் காலத்திற்குரிய (கிமு 200-50) ஒரு வட இந்திய சுடு மண்கலத்தில் ஒரு பெண் கச்சா பாணியில் உடல் முழுவதும் சேலையை இறுக்கமாகச் சுற்றியுள்ள காட்சி காணப்படுகிறது. இந்திய காந்தார நாகரிகத்தில் (கிமு50-கிபி300) பல்வேறுபட்ட வகைகளில் சேலை சுற்றி அணியப்படும் முறை காணப்பட்டது. கிபி 5ம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்த மேற்கு மகாராஷ்ரத்தில் உள்ள அஜந்தா குகை ஓவியங்களில் பெண் தெய்வங்களும் அசுரப் பெண்களும் உடல் முழுவதையும் சுற்றி சேலை அணிந்துள்ளதைக் காணலாம்.
ஊசிகளால் துளைக்கப்பட்ட ஆடைகள், அதாவது தைக்கப்பட்ட ஆடைகள் தூய்மை அற்றவை எனப் பண்டைக்கால இந்துக்கள் கருதினர் இதனால் சேலைகளே அக்காலத்தில் புனிதமான ஆடைகளாகக் கருதப்பட்டிருக்கக்கூடும். மேலும், தற்காலத்தில் புடவையுடன் அணியப்படுகின்ற உள்பாவாடை மற்றும் ரவிக்கை போன்ற தனிப்பட்டவருக்கு ஏற்றவாறு தைக்கப்படும் ஆடைகள் பிரித்தானியரின் வருகைக்குப் பின்னரே பெருமளவில் புழக்கத்துக்கு வந்ததாகக் கூறப்படுகின்றது.
புடவை கட்டும் முறைகள்
https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/df/Styles_of_Sari.jpg/220px-Styles_of_Sari.jpg
பாரம்பரிய புடவை கட்டும் முறைகள்
இது பழக்கத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும், இது ஒரே உடையாகவே கருதப்பட்டு வந்தாலும்,இதை கட்டும் முறைகளில் பெருமளவு வேறுபாடுகள் காணப்படுகின்றன.
பொதுவான முறை
பொதுவாக சேலை 5 1/2 மீட்டர் நீளமுடையதாக இருக்கும். சேலை கட்டும்போது முந்தானைக்கு நேரெதிர் முனையில் ஒரு முடிச்சு போட்டு இடுப்பில் வலதுபுறம் சொருகிக் கொள்ள வேண்டும். பின்னர் இடதுபுறத்திலிருந்து வலது புறமாக ஒரு சுற்று சுற்றி, நான்கு விரலையும் சற்று விரித்து வைத்துக்கொண்டு 4 அல்லது 5 மடிப்புகள் மடித்து இடுப்பில் சொருகிக் கொள்ள வேண்டும். இந்த மடிப்புகள் `முன்கொசுவம்’ என்று அழைக்கபடும். பின்பு மறுபடியும் இடதுபுறத்திலிருந்து வலதுபுறமாக ஒரு சுற்று சுற்றி பெரிய மடிப்பாக 3 அல்லது 4 மடிப்புகள் மடித்து இடது தோளில் போட்டுக் கொள்ள வேண்டும். இது `முந்தி’ அல்லது `முந்தானை’ என்று அழைக்கபடும். இதுவே நிவி பாணி (nivi) என்று அழைக்கப்படுகிறது.

பாரம்பரிய முறைகள்
எனினும், இந்தியாவிலும், ஏனைய நாடுகளிலும் புடவை அணியும் முறைகளில் பல பிரிவுகளும், துணைப் பிரிவுகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன. பண்பாட்டு மானிடவியலாளரும், புடவை ஆய்வாளருமாகிய சந்தல் பொலங்கெர் (Chantal Boulanger) என்பார் புடவைகளை அவை கட்டப்படும் முறைகளையொட்டிப் பின்வரும் பாணிகளாகப் பிரித்துள்ளார்.
குறையும் செல்வாக்கு
கிராமப்புறங்களில் இன்றும் பெண்கள் தொடர்ந்து சேலையையே அணிந்து வருகின்றனர். ஆயினும் நகரங்களில் இந்நிலை பெரிதும் மாறி வருகிறது. அங்கு வாழும் பெண்கள் பல்வேறு துறைகளில் படித்து வேலை செய்வதுடன் பல வெளி வேலைகளையும் கையாளும் வல்லமை பெற்று வருகின்றனர். இதனால் வீட்டிலிருக்கும் பெண்கள் போல சேலை அணிவது சிறிது சிரமமான காரியமாய் இருக்கிறது. இதனால் காஷ்மீர்பஞ்சாப் மாநிலப் பெண்களின் மரபுரீதியான ஆடையாக மாறிய சல்வார்-கமீஸ், சுரிதார் குர்த்தா (churidar-kurta) என்பன தமிழ்ப் பெண்கள் மத்தியிலும் இன்று பெரும் செல்வாக்குப் பெற்று வருகின்றது. ஆயினும் வேலைக்குச் சேலை அணிந்து செல்லும் பெண்களுக்கும் குறைவில்லை. இலங்கையிலும் இந்தியாவிலும் இன்றும் பெண்கள் வேலைக்குச் செல்வதற்கு சேலையே அணிந்து செல்கின்றனர். புலம்பெயர்ந்த பின்னர் பெரும்பான்மையான இந்திய, இலங்கைப் பெண்கள் சேலையணிவதை சிறப்பு நிகழ்ச்சிகளுக்கென்று ஒதுக்கி வைத்துள்ளனர்.